பிரான்ஸ் ரயில் சேவைகள் மீண்டும் பாதிப்பு : பயணிகள் அவதி!
பாரிஸ் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்துள்ள நிலையில், நாட்டின் தென்கிழக்கு மற்றும் சுவிட்சர்லாந்தை இணைக்கும் அனைத்து அதிவேக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒலிம்பிக் மற்றும் கோடை விடுமுறைக்கு புறப்படும் போது ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
பிரெஞ்சு தலைநகரில் உள்ள Gare de Lyon ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் அனைத்து விரைவு ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது மரத்தை வெட்டி அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும், மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக நடந்த நாசகார செயல்களால் பிரான்சின் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து இது வந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)