இலங்கையில் தமிழர் தாயகம் வேண்டுமா? அமெரிக்காவில் பொது வாக்கெடுப்பு
இலங்கையில் தமிழர் தாயகம் தேவையா இல்லையா என வாக்கெடுப்பு நடத்த அமெரிக்காவிலுள்ள பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மேலும் ஒரு படியாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் இந்த வாக்கெடுப்பில் தங்கள் கருத்தை தெரிவிக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்வு காண முடியும் எனவும் அதன் பின்னரே சர்வஜன வாக்கெடுப்பை சர்வதேசம் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.