வட அமெரிக்கா

வெனிசுவேலா தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகள் மக்கள் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை: பிளிங்கன்

வெனிசுவேலா அதிபர் நிக்கலஸ் மதுரோ மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவித்து, வெனிசுவேலா தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகள் மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதில் அமெரிக்கா தீவிர அக்கறை கொண்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திங்கட்கிழமை தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்த சில நிமிடங்களில், இந்தோ-பசிபிக் நாடுகளின் வளர்ச்சி குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தின் இடையே பிளிங்கன் இவ்வாறு கருத்துரைத்தார்.

“சற்று முன்பு வெனிசுவேலா தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளைப் பார்த்தோம். அது வெனிசுவேலா மக்களின் விருப்பத்தையோ அவர்களின் வாக்குகளோயோ பிரதிபலிக்கவில்லை என்பதில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டுள்ளோம்,” என்று பிளிங்கன் கூறினார்.

U.S. concerned results announced by Venezuela election authority don't  reflect votes, says Blinken | Reuters

வெனிசுவேலா அதிபர் தேர்தலை அனைத்துலக சமூகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்றும் அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு வாக்கும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் எண்ணப்படுவது மிகவும் முக்கியம். தேர்தல் அதிகாரிகள் உடனடியாக எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் தாமதமின்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும், தேர்தல் அதிகாரிகள் வாக்குகளின் விரிவான அட்டவணையை வெளியிடுவதும் முக்கியம்,” என்று பிளிங்கன் விவரித்தார்.

வெனிசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் திரு மதுரோ 51% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகக் கூறியது. ஆனால் தேர்தலுக்கு முன் வெளியான பல கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்று முன்னுரைத்திருந்தது.

வெனிசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையான ஓர் அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அது அரசாங்கத்தின் ஓர் இணை அமைப்பாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

Venezuela President Nicolas Maduro wins third term with result disputed

அமெரிக்கத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற எடிசன் ரிசர்ச் அமைப்பு, எதிர்க்கட்சி வேட்பாளர் கொன்சாலஸ் 65% வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என்றும் மதுரோவுக்கு 31% வாக்குகள் கிடைக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

சோஷலிஸ்ட் தலைவர் மதுரோவின் 2018 மறுதேர்தலை நிராகரித்த வாஷிங்டன், கடந்த அக்டோபரில் வெனிசுவேலாவின் எண்ணெய்த் தொழில் மீதான தடைகளை, மதுரோ மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு தளர்த்தியது.

வாஷிங்டன் பின்னர், ஜனநாயக முறையில் வாக்கெடுப்புக்கு எதிராக ஆளும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளது என்று கூறி, வர்த்தகத் தடைகளை மீண்டும் அமல்படுத்தியது. மேலும், வெனிசுவேலா தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பொருத்து தங்கள் பொருளியல் தடைக் கொள்கையை பரிசீலிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி விளக்கியது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்