ஒலிம்பிக் போட்டிகள் : கனேடிய கால்பந்து அணிக்கு புள்ளிகள் குறைப்பு!

கனேடிய பெண்கள் ஒலிம்பிக் கால்பந்து அணிக்கு 06 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ட்ரோன் உளவு ஊழலில் மூன்று பயிற்சியாளர்கள் ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தொடக்க ஆட்டத்திற்கு முன்பு நியூசிலாந்தின் எதிரிகளின் பயிற்சியின் மீது இரண்டு உதவி பயிற்சியாளர்கள் ட்ரோனை பறக்கவிட்டு பிடிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து FIFA கனடாவின் கால்பந்து அணிக்கு 06 புள்ளிகளை கழித்துள்ளது. அத்துடன் நாட்டின் கால்பந்து கூட்டமைப்பிற்கு 200,000 சுவிஸ் பிராங்குகள் (£176,000) அபராதம் விதித்துள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பெவ் ப்ரீஸ்ட்மேன், ஜோசப் லோம்பார்டி மற்றும் ஜாஸ்மின் மாண்டர் ஆகியோர் தலா ஒரு வருடம் தடை செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 92 times, 1 visits today)