ஐரோப்பிய நாடொன்றில் பரபரப்பு – முதியோர் காப்பகமொன்றில் 6 பேர் சுட்டுக்கொலை
தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள முதியோர் காப்பகமொன்றில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
டாருவா் நகரிலுள்ள முதியோா் காப்பகத்துக்கு திங்கள்கிழமை வந்த நபர் அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், காப்பகத்தில் தங்கியிருந்த 5 பேரும் காப்பகப் பணியாளர் ஒருவரும் உயிரிழந்தனர். இது தவிர ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எனினும் அவரை அருகிலுள்ள உணவகத்தில் பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பதிவு செய்யப்படாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் ராணுவ வீரா் எனவும் 1973-இல் பிறந்த அவர் குரோஷியாவில் கடந்த 1991-95-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் பங்கேற்தாகவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன. அவரின் உறவினர் ஒருவர் அந்தக் காப்பகத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.