டிரம்பை தோற்கடித்து, வீழ்த்திக் காட்டுவோம் – தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த கமலா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்து, வீழ்த்திக் காட்டுவோம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் விலகியதுடன், கமலா ஹரிஸை முன்னிறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து , ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பிரசாரத்தின்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பா ? வழக்கறிஞர் கமலா ஹரிஸா ? என கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும் பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை டிரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(Visited 24 times, 1 visits today)