துருக்கியில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யும் ஈராக்
ஒரு புதிய மின் பாதை துருக்கியில் இருந்து ஈராக்கின் வடக்கு மாகாணங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
115-கிலோமீட்டர் பாதையானது மொசூலுக்கு மேற்கே உள்ள கிசிக் மின்நிலையத்துடன் இணைகிறது மற்றும் துருக்கியில் இருந்து ஈராக்கின் வடக்கு மாகாணங்களான நினிவே, சாலா அல்-தின் மற்றும் கிர்குக் ஆகிய பகுதிகளுக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈராக்கை அண்டை நாடுகளுடன் இணைக்க புதிய வழி ஒரு “மூலோபாய” நடவடிக்கை என்று பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார்.
“இந்த பாதை இன்று செயல்படத் தொடங்கியது” என்று மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மௌசா தெரிவித்துளளார்.
(Visited 3 times, 1 visits today)