எலோன் மஸ்க் எடுத்துள்ள திடீர் முடிவு
எக்ஸ் சமூக ஊடக வலையமைப்பின் உரிமையாளரான எலோன் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவனம் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸ் நகருக்கு மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.
பாடசாலை குழந்தைகளின் பாலின அடையாளம் தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எலோக் மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின்படி, குழந்தைகளின் பாலின அடையாளம் தொடர்பான தகவல்களை பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பினருக்கு வழங்க பாடசாலை ஆசிரியர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் குழந்தைகளின் பாலின அடையாளங்கள் குறித்த தகவல்களை பெற்றோருக்கு வெளியிடுவது தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெவ்வேறு பாலியல் அடையாளங்களைக் கொண்ட சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் குழந்தைகளுக்கு அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க உரிமை உண்டு என்று கூறியுள்ளனர்.
எனினுமு், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.