அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளை மேற்கொள்ள முடியாது என அதன் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
புதிய அடையாள அட்டையில் அதை வைத்திருப்பவரின் கைரேகைகளும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)