பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் தாக்குதல்: 141 பேர் பலி: 400 பேர் படுகாயம்

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக காசாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல், பொதுமக்கள் குடியிருப்புகளின் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் 400 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இவர்களை சேர்த்து இதுவரை காசா பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது. 88 ஆயிரத்து 800 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த தகவலை காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
(Visited 26 times, 1 visits today)