கலிபோர்னியாவில் விமான நிலையம் அருகே பரவிய காட்டுத் தீயால் நேர்ந்த விபரீதம்

கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவின் கிழக்கே உள்ள விமான நிலையம் அருகே காட்டுத் தீ ஏற்பட்டது.
எல் டொராடோ கவுண்டியில் உள்ள ப்ளேசர்வில்லி விமான நிலையத்திற்கு அருகாமையில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான தீ விபத்து காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 77 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி எரிந்து நாசமானது.
(Visited 50 times, 1 visits today)