ஜனாதிபதி ரணிலை சந்திக்க தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா

பல்வேறு சரச்சைக்கு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், அது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றையதினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை வைத்தியர் அர்ச்சுனா சந்தித்து பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது.
(Visited 12 times, 1 visits today)