தென்னாப்பிரிக்காவில் படம் எடுக்க சென்ற ஸ்பெயின் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி
தென்னாப்பிரிக்காவில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பிலானஸ்பர்க் தேசியப் பூங்காவில் அந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த 43 வயதுடைய நபர் யானைகளை அருகிலிருந்து படம் எடுப்பதற்காக வாகனத்திலிருந்து வெளியேறியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருடன் 3 பெண்கள் இருந்தனர். அவர்கள் பூங்காவைச் சுற்றிப் பார்க்கும்போது 3 யானைகளையும் அவற்றின் 3 குட்டிகளையும் கண்டனர்.
வாகனத்தை நிறுத்திய ஆடவர் இறங்கி யானைகளுக்கு அருகே செல்ல முயன்றார். அப்போது அவர் யானைகளால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
யானைகள் வேறு யாரையும் தாக்கவில்லை என்றும் அங்கிருந்து சென்றுவிட்டன. குட்டிகளைக் காப்பாற்றுவதற்காக யானைகள் ஆடவரைத் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவரின் உடலை ஸ்பெயினுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.