ஆஸ்திரேலியாவில் விசேட சுற்றிவளைப்பு – பொலிஸார் விசேட கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் Melbourne Seddon பகுதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் Seddon இல் உள்ள Victoria St மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்து பாதுகாப்பை பலப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் ஆயுதம் ஏந்தியதால் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Visited 27 times, 1 visits today)