ஐரோப்பா

குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ; மாயமான வருங்கால கணவன்!

ஸ்கொட்லாந்தில் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியர் ஒருவர் தமது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த வருங்கால கணவன் மாயமாகியுள்ளார்.

ஸ்கொட்லாந்து பொலிஸார் குறித்த நபரை தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். 35 வயதான Marelle Sturrock கிளாஸ்கோவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

நிறைமாத கர்ப்பிணியான அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், விரிவான விசாரணை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மரணமடைந்த ஆசிரியரின் வருங்கால கணவன் திடீரென்று மாயமாகியுள்ளதும் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி குடியிருப்பில் மர்ம மரணம்: மாயமான வருங்கால கணவன் | Pregnant Teacher Found Dead Police Search Fiance

டேவிட் யேட்ஸ் என்ற அந்த நபரை தீவிரமாக தேடிவரும் பொலிஸார், ஹெலிகொப்டர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியையும் நாடியுள்ளனர். ஆசிரியர் Marelle Sturrock தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2015ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ள இந்த தம்பதி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. சடலமாக மீட்கப்படுவதற்கும் ஒரு நாள் முன்னர், தமது நண்பர்களுடன் சிரித்த முகத்துடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை Marelle Sturrock தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தமது 17 வயது முதல் கிளாஸ்கோவில் குடியிருக்கும் Marelle Sturrock முதலில் நாடக கலைஞராகவும் பின்னர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றத் துவங்கியுள்ளார். தற்போது Mugdock பூங்கா பகுதியில் இருந்து டேவிட் யேட்ஸ் மாயமாகியுள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்