பிரான்ஸில் முதல் முறையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை

பிரான்ஸில் முதல் முறையாக முயல்களுக்காக பிரத்யேகமான பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸி வடக்கு நகரமான Rouen இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இன முயல்களோடு, மேலும் சில கொறித்துண்ணிகளும், கினியா பன்றி என அழைக்கப்படும் ஒருவகை உருண்டையான விலங்குகளும் அங்கு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
70 சதுரமீற்றர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்குரிய பாதை ஒழுங்குகளும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவுக்கு செல்பவர்கள், உங்களது வளர்ப்பு நாயினை அழைத்துச் செல்ல முடியாது எனவும், அங்கு சந்திப்புக்கள், உரையாடல்களுக்கான அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)