வட இந்தியாவில் சிவனை தரிசிக்க சென்ற 87 பேர் பலி!

வட இந்தியாவில் இந்து சமயக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 120 மைல் தொலைவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலம் சிக்கந்த்ரா காவ் என்ற இடத்தில் இந்துக் கடவுளான சிவனைக் கொண்டாட வழிபாட்டாளர்கள் கூடியிருந்தனர்.
இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியே 87 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போலே பாபா என்ற மதத் தலைவருடன் பங்கேற்பாளர்கள் நிகழ்விலிருந்து வெளியேற விரைந்தபோது நெரிசல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 35 times, 1 visits today)