தென்கொரிய இசையை பகிர்ந்த இளைஞருக்கு பகிரங்கமாக தண்டனை விதித்த வடகொரியா!
22 வயதான வட கொரியர் ஒருவர் தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசையைப் பார்த்ததற்காகவும், பகிர்ந்ததற்காகவும் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார்.
தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வட கொரிய மனித உரிமைகள் பற்றிய 2024 அறிக்கையில் அறுநூறுக்கும் மேற்பட்டவர்களின் சாட்சியங்களை விட்டுச் சென்றுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத ஒருவரின் சாட்சியத்தின்படி, தென் ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த இளைஞன் 2022 இல் 70 தென் கொரிய பாடல்களைக் கேட்டதற்காகவும், மூன்று படங்களைப் பார்த்ததற்காகவும், அவற்றை விநியோகித்ததற்காகவும் தூக்கிலடப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை மீறியமைக்காக அவர் தூக்கிலடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது வடகொரியாவில் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கு எதிராக கடுமையான சட்டவிதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
ஒடுக்குமுறையின் மற்ற நிகழ்வுகளில் மணப்பெண்கள் வெள்ளை ஆடை அணிவது, மணமகன் மணமகளை சுமந்து செல்வது, சன்கிளாஸ் அணிவது, அல்லது மது கண்ணாடிகளில் இருந்து மது அருந்துவது போன்ற “பிற்போக்கு” நடைமுறைகளுக்கான தண்டனைகளுகம் அமுலில் உள்ளது.
இவை அனைத்தும் தென்கொரியாவின் பழக்கவழக்கங்களாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.