அமெரிக்க தேர்தல் முதல் நேரடி விவாதம்: குடியேறிகள் தொடர்பில் குற்றம் சுமத்திய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பும் தேர்தலுக்கு முன்பாக முதல் நேரடி விவாதத்தில் மோதியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. பைடனும், திரு டிரம்ப்பும் இரண்டாவது முறை ஜனாதிபதியாகுவதற்குக் களம் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் CNN ஒளிவழி ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு நேரடி விவாதங்களை நடத்துகிறது.
முதல் விவாதம் இன்று நடந்தது. அதில் பங்கேற்ற பைடனும், டிரம்பும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
அமைதியாகத் தொடங்கிய விவாதம் ஒரு கட்டத்தில் உக்கிரமடைந்தது. இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினர். பைடன் பேசும்போது அவ்வப்போது குழறினார். குடியேறிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக டிரம்ப் சாடினார். ஆதாரமில்லாமல் அவர் அவ்வாறு சொல்வதாக பைடன் பதிலளித்தார்.
விலைவாசி உயர்வு, பொருளியல், அமெரிக்கர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, உக்ரேன் போர், காஸா போர், பருவநிலை மாற்றம் முதலிய அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.