செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.

இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

(Visited 54 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!