சூரிய நமஸ்காரத்தின் வியப்பூட்டும் நன்மைகள்
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய நமஸ்காரம் என்றால் என்ன ?
நம் முன்னோர்கள் நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆசனங்களை வரிசைப்படுத்தி உருவாக்கியதுதான் சூரிய நமஸ்காரம். யோகாசனத்தில் ஒரு சில எளிமையான ஆசனங்களை கொண்டதாகும்.
இந்த ஆசனங்களை செய்யும்போது நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. நம் உடலில் மூன்று வகையான நாடிகள் உள்ளது .அதில் சுஸ்வன நாடி, இடநாடி ,பிங்கள நாடி என கூறப்படுகிறது.
பிங்கள நாடி என்பது வலது உறுப்புகளை இயக்கக் கூடியது மேலும் இது சூரிய ஆற்றலை கொண்டதாகும். இட நாடி என்பது இடது உறுப்புகளை இயக்கக் கூடியதாகும். இது சந்திர ஆற்றலை கொண்டதாகும்.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளது .தமிழ் மாதங்களில் 12 மாதங்கள் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் 12 என்ற எண்ணிக்கையில் சூரிய நமஸ்காரத்தை அமைத்து கொடுத்துள்ளார்கள்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
ஒவ்வொரு ஆசனங்களுக்கும் ஒவ்வொரு நன்மைகள் உள்ளது. அதன் அடிப்படையில் சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது கால் வலி மற்றும் தொப்பை குறைக்கப்படுகிறது. இடப்புறச் சதைகள் குறைக்கப்படுகிறது. இடுப்பு எலும்பு ,தொடை எலும்பு, கை எலும்பு போன்றவை வலுப்பெறுகிறது.
மேலும் ரத்த ஓட்டம் சீராக இயங்கப்படுகிறது. சிறு வயது முதல் இருந்தே இந்த யோக பயிற்சியை செய்யும் பொழுது பிற்காலத்தில் சர்க்கரை நோய். இதய நோய் ,மூட்டு வலி போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது.
நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்கிறது. சித்த மருத்துவத்தில் இதை வைத்து தான் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால் இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால்தான் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. இதை சீராக செயல்பட சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது.
சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் இயக்கப்படுகிறது. அதன் மூலம் அதைச் சுற்றி உள்ள உறுப்புகள் சீராக இயங்குகிறது.
இந்த பிரபஞ்சத்தின் காலநிலைகளால் நம் உடலுக்கு எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படாமல் சீர்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் காலநிலை மாறுபாட்டால் ஒரு சிலருக்கு உடல் பிரச்சினைகள் ஏற்படும்.
அதாவது குளிர் காலம் ஒரு சிலருக்கு ஒற்றுக்கொள்ளாது ,சிலருக்கு வெயில் காலம் ஒற்றுக்கொள்ளாது. இப்படி அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ப நம் உடலை சீர்படுத்தி பாதுகாக்கிறது.
நம் உடலில் உள்ள சுரப்பிகள் சீராக செயல்படவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு சுரப்பிகள் சுரக்கப்படுகிறது. உதாரணமாக தூக்கத்திற்காக ஒரு சுரப்பியும் ,பசிக்காக ஒரு சுரப்பியும், விழிப்பிற்காக ஒரு சுரப்பையும் நம் உடலில் சுரக்கிறது.
இவற்றில் ஏதேனும் மாறுபாடு நிகழ்ந்தால் பல நோய்களும் உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. இந்த சுரப்பிகளை சரியான முறையில் இயங்கச் செய்ய சூரிய நமஸ்காரம் பயனுள்ளதாக இருக்கிறது.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை :
சூரிய நமஸ்காரத்தை காலை மற்றும் மாலை என இரு முறை செய்யலாம். சூரிய ஒளி உங்கள் மீது படும் படி செய்வது நல்லது. இதன் மூலம் நம் உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்தும் கிடைத்து விடும்.
மேலும் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு மலம் ,ஜலம் கழித்துவிட்டு செய்ய வேண்டும். கீழே ஏதேனும் தரை விரிப்பை விரித்து தான் செய்ய வேண்டும். மேலும் இதில் 12 ஆசனங்கள் உள்ளது.
இந்த ஆசனங்களை செய்யும்போது பின்புறம் வளையும் போது மூச்சை உள்நோக்கி இழுக்க வேண்டும். முன்புறம் வளையும் போது மூச்சை வெளி விட வேண்டும் .இந்த முறைகளை கடைப்பிடித்து தான் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
நம் உடல் ஆரோக்கியத்திற்காக நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை நமக்கு சொல்லிக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். அதில் உடற்பயிற்சி, யோகா, உணவு முறை போன்றவை உள்ளது.
இதில் மிக எளிமையாகவும் அனைவரும் செய்யக்கூடியதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்த சூரிய நமஸ்காரத்தை மட்டும் செய்தாலே நம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம் .