சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்ற புட்டினின் வடகொரிய பயணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி இரண்டு நாள் விஜயமாக வடகொரியா செல்ல தயாராக இருப்பதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ரஷ்ய விஜயத்தின் போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், ரஷ்ய ஜனாதிபதி இந்தப் பயணத்தில் இணையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் வடகொரியா விஜயம் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 16 times, 1 visits today)