பிரான்ஸில் இணையத்தள விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பிரான்ஸில் இணையத்தள விளம்பரங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது.
இணையத்தள ஊடாக மோசடியில் ஈடுபட்டு 4 மில்லியன் யூரோக்கள் வரை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 28 தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள், இணையமூடாக தளபாடங்கள் விற்பனை செய்வதாக விளம்பரங்கள் கொடுத்து முன்பதிவுக்காக பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒருபோதும் தளபாடங்களை விநியோகிக்கவில்லை.
தீவிர விசாரணைகளின் பின்னர் ஜூன் 3 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இதுவரை 4 மில்லியன் யூரோக்கள் மொத்தமாக மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்களிடம் இருந்து 200,000 யூரோக்கள் பெறுமதியுடைய பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)