துருக்கியில் செயற்கை நுண்ணறிவு உதவியோடு பரீட்சை எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி
துருக்கியில் மாணவர் ஒருவர் பரீட்சை எழுதி ஏமாற்றியய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு எழுதிய மாணவர் ஏமாற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்த முயற்சியில் கைகொடுக்க அவர் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தினார். தேர்வின்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்ட மாணவரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மாணவருக்கு உதவிய நபர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டார்.
சட்டையின் பொத்தானைப் போல தோற்றம் கொண்ட கேமராவை மாணவர் எப்படி பயன்படுத்தினார் என்று காட்டும் காணொளியையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அந்த பொத்தான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டது.
அதன் இணையச் சமிக்ஞை மாணவருக்கு உதவிய நபரின் காலணியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தது.