இலங்கை கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – அமைச்சர் அதிரடி திட்டம்
கல்விப் பொதுத் தரப் பரீட்சை முடிந்து உடனடியாக உயர்தரப் படிப்பை ஆரம்பித்து பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
16 வயதுக்கு மேல் உயர்தரப் படிப்பை நிறைவு செய்து 18 வயதுக்கு மேல் பல்கலைக்கழக நுழைவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில், இதுவரை விடுபட்ட கற்கைகளை நிறைவு செய்வதற்காக பல்கலைக்கழக அமைப்பில் இரண்டு குழுக்கள் ஒரே நேரத்தில் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் கல்வி அமைச்சர் தலைமையில் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.