இலங்கையில் தீர்வின்றி தொடரும் போராட்டம் : ரயில் பயணிகள் அவதி!
புகையிரத சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நான்காவது நாளாகவும் இன்று (10) தொடர்வதாகவும், இதன் காரணமாக இன்று காலை 20 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் இன்ஜின் டிரைவர்கள் குழு இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கியது.
இதனால் இன்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், போக்குவரத்து மிகுந்த மெயின் லைன் ரயில் நிலையங்கள் பலவும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
வேலைநிறுத்தம் காரணமாக சில ரயில்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
(Visited 15 times, 1 visits today)





