பயங்கரவாத திருத்தச் சட்டமூலத்தில் முன்மொழிகளை ஏற்க தயார் – பந்துல குணவர்த்தன!
மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதற்கான நோக்கமாகும். அதில் பொறுத்தமான திருத்த முன்மொழிவுகளை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார்.
அதற்கமைய மகாசங்கத்தினர் உட்பட ஏனைய எந்தவொரு தரப்பினரும் திருத்தங்களை முன்வைத்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே இந்த சட்ட மூலத்தின் நோக்கமாகும். எமது இந்த நோக்கத்தில் மாற்றங்கள் இல்லை என்பதால் பொறுத்தமான திருத்தங்களை ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளோம். எனத் தெரிவித்தார்.