இலங்கையில் 500 ரூபாய்க்காக அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி
 
																																		பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் 500 ரூபா பணத்தை திருடிய தனது மூத்த சகோதரனை எட்டி உதைத்து கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்வத்த உபோசதாராம வீதியில் வசிக்கும் 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜயந்த சில்வா என்ற 52 வயதுடைய நபரே பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்த தனது மூத்த சகோதரர் மற்றும் தாயாருடன் வீட்டில் வசித்து வருவதுடன், 500 ரூபா திருடப்பட்டமை தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து கடந்த 13ஆம் திகதி அவர் தனது மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்ததுடன், பிரேதப் பரிசோதனையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தலைமையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
        



 
                         
                            
