ஜெர்மனியில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் மக்களுக்கு அமுலாகும் சட்டம்
ஜெர்மனியில் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர் மாற்றம் தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெயர் சட்டம் என்று சொல்லப்படும் நாமன் ரெக்ட் என்று சொல்லப்படும் சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது.
உதாரணமாக திருமணத்திற்கு பிறகு ஆண் அல்லது பெண் டொபில் நேம் என்று சொல்லப்படும் கணவன் அல்லது மனைவியின் பெமிலியர் நேம் என்று சொல்லப்படும் குடும்ப பெயரையும் பெண்ணின் குடும்ப பெயரையும் ஒன்றாக சேர்த்து வைக்க கூடிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் எதிர் வரும் காலங்களில் இவ்வாறு 2 பேரும் இவ்வகையான இந்த குடும்ப பெயரை வைத்து இருக்க முடியும் என்று குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் முறிவு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு எவ்வாறு பெயர்கள் அமைய வேண்டும் என்ற விடயத்தில் புதிய சட்டத்தில பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பிள்ளைகளும் இரட்டை பெயர்களை வைத்து இருக்க முடியும் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.