இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாவை தடை செய்யும் மற்றுமொரு நாடு
இந்தியாவில் தயாரிக்கப்படும் Everest மீன் கறி மசாலாவை தொடர்ந்து பல நாடுகள் தடை செய்து வருகின்றது.
இந்த நிலையில், Everest மற்றும் MDH கறி மசாலா ஆகிய 2 பொருள்களை விற்க மலேசியா தடை விதித்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர், நேப்பாளம் ஆகியவை ஏற்கெனவே அவற்றுக்குத் தடை விதித்துவிட்டன.
அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அந்த மசாலா குறித்து கூடுதல் விவரங்களைச் சேகரிப்பதாகக் கூறின.
அந்த மசாலாக்களில் ethylene oxide நச்சுப்பொருள் கலந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நேரடியாகவோ இணையத்திலோ அவற்றை விற்பனை செய்யவேண்டாம் என்று மலேசியச் சுகாதார அமைச்சு வியாபாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை Everest மீன் கறி மசாலாப் பொருள் ஒருமுறை மட்டுமே மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
MDH கறி மசாலா மலேசியாவுக்கு இறக்குமதியாகவில்லை எனச் சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.