ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

UKவில் தேர்தலில் இருந்து விலகும் தலைவர்கள் :  மாற்றத்திற்கான அறைக்கூவல்!

பிரித்தானியாவில் வரும் ஜுலை மாதம் 04 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக உள்ளுராட்சி தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. எதிர்பாராத விதமாக தொழிற்கட்சி அபார வெற்றிப்பெற்றது.

ஆகவே பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு மிகப் பெரிய வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்  ரிஷி சுனக் தேர்தல் குறித்த அறிவிப்புகளை திடீரென அறிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளகது.

அவருடைய கட்சிக்கு வாய்ப்பிருக்கிறதா, இல்லையா என்பது மிகப் பெரிய கேள்வி? சில வேளைகளில் ரிஷி சுனக்கின் ஆட்சியின்போது இங்கிலாந்து பொருளாதாம்  மந்தக் கதியில் இருந்து மீண்டுள்ளது மிகப் பெரிய பக்கபலமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தற்போதுதான் மிகப் பெரிய பிரிச்சினை தலைத் தூக்கியிருக்கிறது. அதாவது தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்த மிக முக்கியமான அனுபவசாலிகள் பலர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். அதாவது வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் உட்பட ரிஷி சுனக் கட்சியின் ஏறக்குறைய 78  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் தாங்கள் போட்டியிடுவதில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அவர்கள் புதிய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதேபோல் லேபர் கட்சியில் இருந்தும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளனர்.

திரு கோவ் தனது உள்ளூர் கன்சர்வேடிவ் அசோசியேஷன் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற உதவியமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சேவை செய்வதற்கான வாய்ப்பு அற்புதமானது. ஆனால் நாங்கள் வெளியேற வேண்டிய நேரம் இது என்று உங்களுக்குத் தெரியும். ஒரு புதிய தலைமுறை வழிநடத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாற்றங்களுக்காகவே தலைவர்கள் தாமக முன்வந்து இளையர்களுக்கு வழிவிடுகிறார்கள். இது சர்வதேச அரங்கில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் தற்போதும் முக்கியமான சில நாடுகளில் ஆட்சியில் இருப்பது அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தான். அதாவது வயது முதிர்ந்தவர்கள் தான்.

ஆக இனி வரக்கூடிய ஒரு தலைமுறைக்கு நாட்டையும், நாட்டு மக்களையும், மிகப் பெரிய பொறுப்புக்களையும் தலைவர்கள் விட்டுக்கொடுப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறான நடைமுறை ஆசிய நாடுகளுக்கும் வரவேண்டும் என்பதுதான் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

குறிப்பாக அதிகளவு பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளிலும் சரி, சாதாரணமாக இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கை போன்ற நாடுகளிலும் சரி அனுபசாலிகளே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சாதாரண இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சில நேரங்களில் அந்த வாய்ப்புகளை நாம் கொடுப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது!!

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்