சூடானில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கர்களை வெளியேற்ற நடவடிக்கை !

சூடானில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஒவ்வொரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், கார்ட்டூமில் இருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உறுதிப்படுத்தினார்.
ஹெலிகொப்டர்கள் மூலம் அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது துப்பாக்கிச் சூடு எதுவும் இடம்பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வெளியேற்றுவதற்காக மூன்று MH-47 ஹெலிகாப்டர்களிலும், சுமார் 100 அமெரிக்க துருப்புக்களும் களமிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணியாளர்கள் சுமார் 70 அமெரிக்க ஊழியர்களை சூடானில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து விமானம் மூலம் அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)