“ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை
தற்போது அழிந்து வரும் நியூசிலாந்து “ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது.
ஏலத்தில் இந்த இறகு 3,000 டொலருக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 28,400 டொலர்களுக்கு மேல் விற்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், தீர்மானிக்கப்பட்ட விலையை விடவும் 450 வீத மடங்கில் இந்த இறகு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவையாக இந்த “ஹுய்யா” பறவை விளங்குகின்றது.
இது உலக சாதனை என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
“ஹுய்யா” பறவை மாவோரி மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது மற்றும் பறவைகளின் இறகுகள் தலைக்கவசம், பரிசு அல்லது விற்பனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
உறுதிப்படுத்திய வகையில் கடைசியாக இப்பறைவையைப் பார்த்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும். ஆனால், 1960கள் வரை இப்பறவையைப் பார்த்ததற்கு நம்பத்தக்க சான்றுகள் உள்ளன.