ஜுலியன் அசாஞ்சேவின் வழக்கு விசாரணை : பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தின் ஒப்படைப்பு உத்தரவை சவால் செய்ய அசாஞ்சேக்கு காரணங்கள் இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் விக்டோரியா ஷார்ப் மற்றும் ஜெர்மி ஜான்சன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இரகசிய அமெரிக்க ஆவணங்களின் மீது 17 உளவு குற்றச்சாட்டுகளையும், கணினியை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும் அசாஞ்சே எதிர்கொள்கிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்சே, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரித்தானிய உயர்பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதற்கு முந்தைய ஏழு ஆண்டுகள் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையிலேயே அவர் பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் வெற்றியீட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட இராஜதந்திர கேபிள்கள் மற்றும் இராணுவ கோப்புகளை திருட அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆய்வாளர் செல்சியா மானிங்கை அசாஞ்சே ஊக்குவித்து உதவியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.