ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் பகுதி கண்டுபிடிப்பு?
ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் வெப்ப மூலமொன்று துருக்கிய ட்ரோன் நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் இரண்டு அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் வாகனத்தில் நேற்று ஈரான் திரும்பியுள்ளார்.
அங்கு, குறித்த பகுதியில் காலநிலை மிகவும் மோசமாக காணப்பட்டதுடன், அவ்வாறான நிலைகளையும் மீறி ஈரான் ஜனாதிபதி பயணித்த மூன்று ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது, ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டருடன் மேலும் இரண்டு எஸ்கார்ட் ஹெலிகாப்டர்கள் பயணித்து, பாதுகாப்பு அளித்து, அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈரானின் தப்ரிஸ் இலக்கை பத்திரமாக வந்தடைந்தன.
ஆனால் ஈரான் ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் பயணம் செய்து ஹெலிகாப்டர் இன்னும் வரவில்லை.
ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.