இலங்கை செய்தி

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமர் தினேஷை சந்தித்தார்

உலகளாவிய சமாதான தூதுவர், ஆன்மீக தலைவர், வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (18) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கையில் இலவச கல்வி நிலையங்களை நிறுவ தனது அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக குருதேவ் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கும் விருப்பம் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் இரண்டு சிறுவர் இல்லங்களையும் நிறுவவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யாதாமினி குணவர்தன, கமற்றும் வாழும் கலை அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!