பிரித்தானியாவில் invisible கேமராக்களை ஏமாற்றும் சாரதிகள் : புதிய வழிகளை தேடும் பொலிஸார்!
பிரித்தானியாவில் அதிகூடிய வேகத்தில் பயணிக்கும் வாகனங்களை கண்காணிக்க சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த கேமராக்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வாகன சாரதிகள் கேமராக்களை விட புத்திசாலிதனமான நடவடிக்கைகளை கையாள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கேமராக்களிடம் இருந்த தப்பிப்பதற்காக அவர்கள் சிறப்பு தட்டுக்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது 3D மற்றும் 4D தட்டுகள் என அழைக்கப்படும் தட்டுக்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்த தட்டுக்களில் இருந்து வரும் ஒளி கேமராக்களை அணுக முடியாமல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகள் மாற்றுவழியை கண்டுப்பிடிப்பதற்காக புதிய தொழிநுட்பத்தில் முதலீடு செய்ய பரிசீலித்து வருகின்றனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரவை உறுப்பினரான கவுன்சிலர் கிரேக் காலிங்ஸ்வுட் கருத்து வெளியிடுகையில், இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து பர்மிங்காம் லைவ் உடன் பேசினார், இது சாலை பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நகரத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.
குற்றவாளிகளைத் தடுக்கவும் கண்டறியவும் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் முதல் கவுன்சிலாக வால்வர்ஹாம்ப்டன் முன்னணியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.