பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு – நேபாள கிரிக்கெட் வீரர் விடுதலை
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை விடுதலை செய்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதுடன், எதிர்வரும் 2020 உலகக் கிண்ணத்தில் இணையும் வாய்ப்பையும் பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்தால், சந்தீப் தனது உலக கோப்பை அணிக்கு பரிந்துரைக்கப்படுவார் என நேபாள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
பதான் உயர் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சாட்சியங்களில் ஏற்பட்ட பிழை காரணமாக கிரிக்கெட் வீரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி 10 ஆம் திகதி, காத்மாண்டு நீதிமன்றம் 18 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததற்காக லாமிச்சேன் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
மேலும் அவருக்கு 2,255 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு 1,500 டொலர் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
அவருக்கு நேபாள கிரிக்கெட் சங்கம் ஜனவரி 11ம் திகதி தடை விதித்தது.
இந்த மாத தொடக்கத்தில், சந்தீப் லமிச்சேன் தனது சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார், மேலும் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள அவரை சிறையில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.