அர்ஜென்டினாவில் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதற்காக எரிக்கப்பட்ட பெண்கள்
அர்ஜென்டினாவில் தங்கும் விடுதியொன்றில் உள்ள அறை ஒன்றுக்கு இரண்டு லெஸ்பியன் ஜோடிகளுடன் தீ வைத்து எரிக்கப்பட்டதில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஒரு நபர் மோலோடோவ் காக்டெய்லை ப்யூனஸ் அயர்ஸில் உள்ள தங்கும் அறைக்குள் வீசியபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பமீலா ஃபேபியானா கோபாஸ் என்ற பெண் கடுமையான தீ காயங்களுக்கு உள்ளாகி உடனடியாக இறந்தார், அவரது கூட்டாளியான மெர்சிடிஸ் ரோக்ஸானா ஃபிகுரோவா இரண்டு நாட்களுக்குப் பிறகு உறுப்பு செயலிழப்பால் இறந்தார், அவரது உடலில் 90 சதவீத தீக்காயங்கள் இருந்தன. மூன்றாவது பெண் ஆண்ட்ரியா அமரன்டே அவரை தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
நான்காவது பெண், சோபியா காஸ்ட்ரோரிக்லோஸ் ரிக்லோஸ்,உள்ளூர் மருத்துவமனையில் உள்ளார்.
ஜஸ்டோ பெர்னாண்டோ பேரியண்டோஸ் என்ற 62 வயதுடைய நபரே தீ மூட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் லெஸ்பியன்கள் என்பதால், அவர் முந்தைய சந்தர்ப்பங்களில் அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அச்சுறுத்தியதாகவும் தங்கும் விடுதியில் இருந்த நேரில் பார்த்தவர்கள் மற்றும் பிற தங்கும் நபர்கள் தெரிவித்தனர்.
அர்ஜென்டினாவில் உள்ள LGBTQ அமைப்புகள் இந்த தாக்குதலை வெறுப்பு குற்றம் என்று வர்ணித்துள்ளன.
அர்ஜென்டினா எல்ஜிபிடி கூட்டமைப்பு ஒரு அறிக்கையில், இந்த தாக்குதல் “சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் வெறுக்கத்தக்க வெறுப்பு குற்றங்களில் ஒன்றாகும்” என்று தெரிவித்தது.