வடகொரியாவில் சிகப்பு நிற உதட்டுச்சாயத்துக்கு தடை விதித்துள்ள கிம் ஜாங் உன்

வடகொரிய தலைவர் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர்.
வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளார்.
அதாவது, சிவப்பு உதட்டுச்சாயம் மட்டுமல்லாது, ஃபேஷனையும் தடை செய்ய சட்டங்களை இயற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை மீறும் பெண்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவில் முதலில் இராணுவம் என்ற கருத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. அனைத்து வட கொரியர்களும் ஒருவரையொருவர் பிரித்தறிய முடியாத வகையில் வாழ வேண்டும். மேலும் கவர்ச்சியின் அடையாளமாகிய சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்ய கிம் ஜாங்-உன் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
(Visited 30 times, 1 visits today)