ஐரோப்பா

பிரித்தானியா தன்னை பாதுகாத்துக்கொள்ள தொழில்நுட்பத்தை கையில் எடுக்க வேண்டும் – ரிஷி சுனக்!

பாதுகாப்பு குறித்த வாக்கெடுப்புடன் மென்மையான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் ரிஷி சுனக் ஆரம்பித்துள்ளார்.

இருப்பினும் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

சட்டவிரோத புலம்பெயர்வோர் குறித்து கருத்து வெளியிட்ட அவர் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இங்கிலாந்தை சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக “பாதுகாப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் “விரைவாக தடுத்து வைக்கப்பட்டு அகற்றப்படுவார்கள் என்று கூறிய அவர் ருவாண்டா திட்டத்தை சிக்கல்களை கையாளும் ஒரு வழியாக அடையாளப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா போன்ற அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டி, “கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு எந்தக் கட்டத்திலும் இல்லாத அளவுக்கு அணுசக்தி விரிவாக்கத்தை உலகம் நெருங்கிவிட்டதால் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பிரிட்டன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் AI புதிய வேலைகளைக் கொண்டுவருவதற்கும் கல்வியை மேம்படுத்துவதற்கும் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் ரிஷி சுனக் “பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டு விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை” என்று டோரி எம்பிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் அவர் பெரும்பாலும் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்