மெக்சிகோவை உலுக்கிய நில அதிர்வு – அபாயம் குறித்து எச்சரிக்கை
மெக்சிகோவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குவாத்தமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.4 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் நில அதிர்வால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என மெக்சிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு மற்றும் மெக்சிகோவின் கடற்படையினர் ஆழிப்பேரலை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)