IPL Match 61- 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.
இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 22 ரன்களையும், மொயின் அலி 10 ரன்களையும், ஷிவம் தூபே 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.
18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 42 ரன்களை குவித்தார்.
ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.