வெளிநாட்டு செல்வாக்கு மசோதாவை எதிர்த்து ஜார்ஜியாவில் மக்கள் பேரணி
அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சர்ச்சைக்குரிய “வெளிநாட்டு செல்வாக்கு” மசோதாவை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான ஜோர்ஜியர்கள் தலைநகர் திபிலிசியின் தெருக்களில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை ஏந்தியவாறு தலைநகரின் ஐரோப்பா சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.
இந்த சட்டம் வெளிநாட்டு நிதியைப் பெறும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சுயாதீன ஊடகங்களை குறிவைக்கும்.
ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சி மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தியதை அடுத்து, கருங்கடல் காகசஸ் நாட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பாரிய பேரணிகள் நடந்தன.
இந்த மசோதா பேச்சு சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)