IPL Match 60 – மழை காரணமாக 16 ஓவர் போட்டியாக மாற்றம்
17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியது. இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதமாக ஏற்பட்டது. இதனையடுத்து 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதில் முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே ஆகும். ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம். 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

அதே சமயம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.