இலங்கை

இலங்கையில் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடரப்பில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கேற்ப தெளிவான அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!