இலங்கை – குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)