ஒவ்வொரு கனேடியரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் – பிரதமர் ஜஸ்ட்டின்
கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவரின் படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொலையால் சீக்கிய சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதை நான் அறிவேன். பாகுபாடு, அச்சுறுத்தல், வன்முறை இல்லாமல் பாதுகாப்பாக வாழும் அடிப்படை உரிமை ஒவ்வொரு கனேடிய குடிமகனுக்கும் உள்ளது.
சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அந்தக் கொலையின் தொடர்பில் இந்திய நாட்டவர் மூவரைக் கனடிய பொலிஸார் அண்மையில் கைதுசெய்தனர்.
இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதாகவும் கனடா கூறியது.
அந்த விசாரணைக்குப் புதுடில்லி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)