காங்கோவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல் : குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் உயிரிழப்பு!
கிழக்கு காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோமா நகருக்கு அருகில் உள்ள லாக் வெர்ட் மற்றும் முகுங்கா ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான இரண்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாம்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா இந்த தாக்குதல்களை “மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அப்பட்டமான மீறல் மற்றும் போர்க்குற்றமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளது.
ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஜீன் ஜோனாஸ் யாவோவி டோசா, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் பயணம் செய்து கொண்டிருந்த காங்கோவின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.