மட்டக்களப்பு – கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மரணம் படுகொலையா அல்லது வேறு காரணமா என ஏறாவூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)